காளான் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம்
வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
Update: 2024-05-02 01:49 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி 4ம் ஆண்டு மாணவி கள் அனுசுயா, கௌசிகா, ஜனனிஸ்ரீ, கீர்த்தனா, மகாலட்சுமி, பொன் ராதிகா, பிரியதர்சினி, மகாலட்சுமி, பொன்ராதிகா, பிரியதர்சினி, சத்யா, சுஷ்மா, வித்யஷாலினி ஆகியோர் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் கடையம் பகுதியில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மந்தியூர் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி அறிவுறுத்தலின் பேரில், பெண் விவசாயி ஒருவருக்கு காளான் வளர்ப்பு முறை பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் செய்முறை விளக்கம் அளித்தனர். குறைந்த முதலீட்டில் அதிக மகசூலை பெற இந்த காளாண் உற்பத்தி அவர்களுக்கு சிறந்த முறையாக இருக்கும் என அறிவுறுத்தினர்.