சேலம் மத்திய சிறையில் எழுத படிக்க கற்றுக் கொண்ட கைதி
Update: 2023-12-05 05:34 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எழுத, படிக்க தெரியாது. இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்காக எழுத்தறிவு என்ற சிறப்பு திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தில் கைதி பெரியசாமி சேர்ந்து தனது பெயரை எழுதவும், படிக்கவும் கற்று உள்ளார். இதுகுறித்து சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் கூறும்போது, கைதி பெரியசாமி எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்த 2 வாரத்தில் அவரது பெயர் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை எழுத கற்றுக்கொண்டார். மேலும் அவர் படிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். இதனால் அவருக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.