பெரம்பலூர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் பி ஆ.ராசா

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழை பெற்றுகொண்டார்;

Update: 2023-12-01 03:02 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் பி ஆ.ராசா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திமுக துணை பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு வருகை தந்தார், இதனை தொடர்ந்து இங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன்படி, பாடாலூரில் புதிதாக துவங்கப்பட்ட அம்பாள் ஜூவல்லர்ஸ் நகைக்கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது தொடர்ந்து கடைக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

  அதனையடுத்து, பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழை கட்சி நிர்வாகிகளும் பெற்றுக் கொண்டார் .அதைத்தொடர்ந்து தனது சொந்த கிராமமான வேலூர் கிராமத்தில், ராஜி என்பவர் உயிரிழந்ததை தகவல் அறிந்து நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement

இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், நல்லதம்பி, வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ராஜேந்திரன், ஆலத்தூர் வல்லவன் செல்லமுத்து உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News