களியப்பேட்டை மயான பாதை பாலம் அமைக்க கோரிக்கை

ஆற்றில் நீர் செல்லும் நேரம் மயானத்திற்கு செல்வ சிரமப்படுவதால் பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-12-27 02:23 GMT

களியப்பேட்டை மயான பாதை பாலம் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியப்பேட்டை கிராமம். இந்த கிராம காலனி பகுதியினர் பயன்படுத்தும் மயானம், களியப்பேட்டை பாலாற்றங்கரையை ஒட்டி உள்ளது. களியப்பேட்டை பாலாற்றில் இருந்து, மெய்யூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை கடந்து இப்பகுதி மயானத்திற்கு செல்லும் நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது, இந்த கால்வாயை துார்த்து மண் கொட்டி பாதையாக பயன்படுத்தப்படுகிறது.

மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது, அப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுவதாகவும், அச்சமயங்களில் உயிரிழந்தவர் சடலங்களை மயானம் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் புலம்புகின்றனர். எனவே, களியப்பேட்டை - மெய்யூர் பாலாற்று கால்வாய் இணைப்பாக பாலம் அமைப்பதோடு, மயான பாதையை சிமென்ட் அல்லது தார்ச்சாலையாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News