மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரியத் துவங்கிய காட்டுத்தீயை அணைக்க கோரிக்கை

கோடை காலம் துவங்கும் முன்பே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரியத் துவங்கிய காட்டுத்தீயை உடனடியாக அணைக்க வேண்டும் என்பதே மன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Update: 2024-02-10 06:17 GMT
கோடை காலம் துவங்கும் முன்பே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரியத் துவங்கியது காட்டு தீ பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயினால் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் தீயில் எரிந்து சேதம் ஆண்டு தோறும் கோடை காலங்களின் ஏப்ரல் மே மாதங்களில் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் கோடை காலங்கள் தூவங்குவதற்கு முன்பே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாலை முதல் சிறிய அளவில் பற்றிய காட்டு தீ நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிப்பினால் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கி தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத் தீ யானது 50,க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான இடங்களில் பரவியதால் வனப் பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சிறிய வகை வன உயிரினங்கள் தீயில் கருகி பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் பற்றி எரிந்து வரும் காட்டுத்தியை உடனடியாக அணைக்க வேண்டும் என்பதே மன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News