கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க கோரிக்கை
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தி, தவறி விழுந்து மாயமான ஜலாலுதீனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-24 07:22 GMT
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழக முதலமைச்சர் மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த பிரேசில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த அபூபக்கர் என்பவரின் மகன் ஜலாலுதீன் (42 ) உட்பட 11 மீனவர்கள் கடந்த 14ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படையில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 21- 1 - 2024 அன்று 40 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஜலாலுதீன் விசைப்படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். சக மீனவர்கள் தேடி அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் அவர் மாயமாகியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து போர்க்கால அடிப்படையில் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தி, தவறி விழுந்து மாயமான ஜலாலுதீனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.