ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தலையீட்டை தடுக்க கோரிக்கை
Update: 2023-12-05 00:54 GMT
மயிலாடுதுறை மாவட்டம் ,குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக எழிலரசி உள்ளார். அவரது கணவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி பணிகளில் தலையிட்டு , ஊராட்சி நிதி முறைகேட்டில் ஈடுபடுகிறார், என ஊராட்சி மன்ற துணைதலைவர் ஜெயசுதா தலைமையில், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் ,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், ஊராட்சியில் வாங்காத பொருட்களுக்கு, வாங்கியதாக கையெழுத்து கேட்பதாகவும், ஊராட்சியில் செய்யப்படும் வேலைகள் குறித்து, கலந்தாலோசிக்காமல் செய்யப்படுவதாகவும், ஊராட்சி செயலர் துணையுடன், லட்சக்கணக்கில் முறை கேடு செய்துள்ளனர் ,என குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக ஊராட்சி செயலரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் ,ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உத்தரவிட்டுள்ளார்.