ரயில் மோதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் பலி!

மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார். 

Update: 2024-02-05 07:02 GMT

ரயில் மோதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் பலி

கேரளா திருவனந்தபுரம் கல்லுமோடு, குட்டையன் மகன் கருப்பசாமி (72) இவர் திருவனந்தபுரத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் முதல் மனைவியை விவாகரத்து பெற்று தற்போது இரண்டாவது மனைவி ரேவதியுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார், முதல் மனைவிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  நேற்று முன்தினம் காலை திருச்சியில் உள்ள மகள் வீட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்வதாக கிளம்பி மதுரை வந்தவர், மாலை குருவாயூர் ரயில் வண்டியில் மதுரையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்து வந்துள்ளார். பின்னர், ஏதோ ஒரு காரணத்திற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். இரவு 08.04 மணிக்கு மணியாச்சிலிருந்து திருநெல்வேலிக்கு இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் நேற்று இரவு திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் அடிப்பட்டு இறந்துள்ளார். அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கொல்லண்கிணறு விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News