தூத்துக்குடியில் காதலர் தினத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி
தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவிலின் முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-15 07:00 GMT
தூத்துக்குடி மாவட்டம் நாசரத் அருகே உள்ள இயக்குனர் ஹரி சொந்த கிராமமான கச்சனா விளை சேர்ந்தவர் சதீஷ் இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குரும்பூர் அருகே உள்ள வாழ சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த வினிதா என்ற இளம் பெண் சென்னையில் தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தன்று இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து வீட்டில் காதல் செய்வதை கூறியவுடன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு மணமகன் சதீஷ் மணமகள் வினிதாவுக்கு மஞ்சள் கயிறு தாலியை கட்டி திருமணம் செய்து கொண்டனர். அப்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இரண்டு வருடமாக காதலித்த தனது காதலியே காதலர் தினம் அன்று மனைவியாக கரம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது என மணமகன் சதீஷ் தெரிவித்தனர்.