மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன் பலி !

மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2024-04-08 08:37 GMT

பள்ளி மாணவன் பலி

போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(16), 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல் பகுதியில் சாலையை கடந்த போது வேகமாக வந்த கார் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது உரசி விட்டு அருகில் இருந்த காரின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடந்த சஞ்சய் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வதற்குள் காரில் இருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இதையடுத்து காயம் அடைந்த மாணவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

Advertisement

  இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்தது மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் சதீஷ் நாத் என்பதும் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News