தமிழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

தமிழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-03-26 09:14 GMT
கருத்தரங்கம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் அகராதியியல் துறை இந்திய இலக்கிய ஆய்வுகளுக்கான பன்னாட்டு ஆய்விதழ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அகராதியியல் பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க விழாவில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கக முன்னாள் இயக்குநர் கோ.விசயராகவன்.பேசியது,

தமிழில் 14 ஆம் நூற்றாண்டில் ரேவண சித்தரால் தொடங்கப்பட்ட நிகண்டு அகராதிதான் முறையான முதல் அகராதி. இரண்டாவது மற்றும் மூன்றாவது அகராதி தேவநேயப் பாவாணர் காலத்தில் படைக்கப்பட்டது.  ஆனால், சதிர் அகராதி, நிகண்டு அகராதி, அகர முதலி மடலங்கள் உள்ளிட்ட அகராதிகளைப் பேசுகிறோமே தவிர, இன்றைய இளைய தலைமுறையினர் புதிதாகப் படைக்கவில்லை. பொருளாய்வுடன் சேர்ந்த சொல்லாய்வு இருந்தால்தான்,

புதிய சொற்கள் வந்த வண்ணம் இருக்கும். தமிழ்நாடு அரசின் சொற்குவைத் திட்டத்தில் மூன்று இலக்கமாக இருந்த நிலையில், 15.27 லட்சம் சொற்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய சொற்கள் வந்து கொண்டிருப்பதை முறைப்படுத்தி பிறமொழிக்குக்கொண்டு செல்ல வேண்டும். என்றார் விசயராகவன். தமிழுக்கு அகராதி இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அகராதியியல் வளர்ந்தால்தான் அருந்தமிழ் வளரும். நம் முன்னோர்கள் கூறிய அகராதியை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு,

இன்றைய தலைமுறையினர் புதிய அகராதியை ப்படைக்க வேண்டும் என்றார் விசயராகவன் இவ்விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், வளர்தமிழ்ப் புல முதன்மையர் இரா. குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக அகராதியியல் துறைத் தலைவரும் (பொ),கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான செ.த. ஜாக்குலின் வரவேற்றார். நிறைவாக, இணைப் பேராசிரியர் சி. வீரமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News