ராமநாதபுரம் மாணவ மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி துறை நிறுவனத்தில் காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி துறை மூலம் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-02-22 11:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் 128 கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி ராமநாதபுரம் வேலு  மனோகரன் அறிவியல் கலைக்கல்லூரி உட்பட 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இக்கருதரங்கில் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை தலைவர் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் அனந்தராமன் கருத்தரங்கு உரையாற்றினார். அப்போதுகடல்  மாசு அடைவதை கடலில் வாழும் முக்கிய உயிர்களான கடல் புர்க்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் பவளப்பாறைகள் ஆகிய வகைகள் கடல் நீரில் உள்ள கார்பன்டை ஆக்சைடை நீக்கிவிட்டு ஆக்சிஜனை கொடுக்கின்றன. கடலுக்கு மேல்பகுதியில் உள்ள கார்பன்டை ஆக்சைடை முற்றிலும் அழித்துவிட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு உற்ற தோழனாக பவளப்பாறைகள், புர்க்கள் விளங்குகின்றன என்றார்.இவைகளை காப்பாற்றவிஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் என்றார்.
Tags:    

Similar News