மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு விரைவில் சிறப்பு முகாம்
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு விரைவில் சிறப்பு முகாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 வட்டாரங்களை சேர்ந்த 751 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக புதுமைப்பெண் திட்டத்தை அரசு கொண்டுவந்ததால் இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி அதிகம் படிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் தமிழக மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மகளிர் உரிமைதொகையை வழங்கி வருகிறது என்றும்,
இந்த உரிமை தொகை கிடைக்கப் பெறாதவர்களையும் பயனாளிகளாக இணைக்கும் வகையில் விரைவில் சிறப்பு முகாம்களை அரசு நடத்த உள்ளதாக பேசினார்.விழாவில் மாவட்ட சமூக நலஅலுவலர் ஷிலா சுந்தரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.