மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்கும் முகாம் வரும் 25,26,27 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

Update: 2024-03-20 02:01 GMT

மாவட்ட ஆட்சியர் 

 மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர். காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மற்றும் மனவளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச பேருந்து பயண சலுகை பெற்று பயனடையும் விதமாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து ஒவ்வொரு நிதியாண்டும் தொடர்ந்து நடைபெறும் திட்டமாகும்.

இம்முகாம் நடைபெறும் காலத்தில் பாராளுமன்ற பொது தேர்தல்-2024 விதிகள் நடைமுறையில் இருக்கும் காரணத்தினால் இம்முகாமில் புதுப்பித்து வழங்கும் இலவச பயணஅட்டை மட்டுமே வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 25.03.204, 26.03.2024, ஆகிய இரண்டு தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 27.03.2024 தினங்களிலும் மொத்தம் 3 நாட்களுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ளும் ஏற்கனவே இவ்வலுவலகம் வாயிலாக இலவச அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய LILL1600T மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் 25.03.204, 26.03.2024, ஆகிய இரண்டு நாட்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல், கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றுடன் 27.03.2024 தினங்களிலும் மொத்தம் 3 நாட்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இலவச பேருந்து LILJ6001 சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News