சங்கரன்கோவில் மாசி மாத கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாசி மாத கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது;
Update: 2024-02-17 11:55 GMT
கிருத்திகை சிறப்பு பூஜை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் கோவிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஸ்ரீ பழனி ஆண்டவர் அலங்காரம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இந்த ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.