வேகமாக சென்ற டூவீலர் சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்து
வேகமாக சென்ற டூவீலர் சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.;
Update: 2024-05-07 13:47 GMT
வேகமாக சென்ற டூவீலர் சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
வேகமாக சென்ற டூவீலர் சென்ட்ரல் மீடியனில் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சுரேஷ் வயது 38. இவர் மே 5-ம் தேதி இரவு 8 மணி அளவில், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் மலை நகர் பிரிவு, மக்கள் மார்ட் அருகே வேகமாக சென்றதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சுரேஷுக்கு தலை, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுரேஷின் மனைவி சம்பூரணம் வயது 30 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்பட காரணமான சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.