ஏற்காட்டில் தனியார் நர்சரி கார்டனில் திடீர் தீ

ஏற்காட்டில் தனியார் நர்சரி கார்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாமானது.

Update: 2024-04-14 12:19 GMT

தீ விபத்து

ஏற்காட்டில் லேடிஸ் சீட் செல்லும் வழியில் தனியார் நர்சரி கார்டன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நர்சரி கார்டனை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நள்ளிரவில் நர்சரி கார்டனில் தீப்பிடித்து எரிவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவர்கள் நர்சரி கார்டன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இவர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீைர அடித்து தீயை அணைத்தனர். எனினும் நர்சரி கார்டனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News