கன்னியாகுமரி புல் வெளியில் திடீர் தீ விபத்து

கன்னியாகுமரி புல் வெளியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-29 13:22 GMT
கன்னியாகுமரியில் புல்வெளியில் தீ விபத்து

கன்னியாகுமரி அருகே  கொட்டாரம் பகுதியில் உள்ள அச்சங்குளம், செல்வன்புதூர் பகுதியில் ஏராளமான பனை மரங்கள் மற்றும் புல்வெளிகள் உள்ளன.      

தற்போது மாவட்டத்தில்   மக்கள் நடமாட முடியாத வகையில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் அச்சங்குளம் புல்வெளியில் இன்று திடீரென தீப்பிடித்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று அந்த பகுதி முழுவதும் பரவியது.     

 இது குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் மற்றும் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.      

அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை பரவ விடாமல் அணைத்தனர். இருப்பினும் அந்த பகுதியில் நின்ற பனை மரங்கள் தீயில் எரிந்து கருகி நாசமாகின தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் நஷ்டம்  தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News