ராமநாதபுரம் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ரத்தன் டாட்டோ வடிவில் பிரம்மாண்ட கேக்
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டோ வடிவில் பிரம்மாண்ட கேக் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது
ராமநாதபுரம் பகுதியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டோ வடிவில் பிரம்மாண்ட கேக் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது வரவேற்பு பெற்று வருகிறது ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் கேக் சிலைகள் ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா மரோடானா பாரதியார் ஆகியோரது கேக் சிலைகள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையோட்டி தொழில் துறையில் சாதனை புரிந்த திரு ரத்தன் டாட்டா அவர்களது கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. தொழிலில் சாதனை புரிந்தது மட்டுமல்ல. அவரது ஈகை குணம் எல்லாரையும் வியக்க வைத்தது. கொரோனா காலங்களில் கூட நிதியினை அள்ளித் தந்துள்ளார் . பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இந்தக் குரலுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்தவர். இந்த கேக் சிலை 60 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளைக் கொண்டு சுமார் 7 அடி உயரத்தில் ராமநாதபுரம் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் பாரதி நகர் கிளையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் விரும்பி பார்த்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.