பெரமனூரில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்

போலீஸ் உதவி கமிஷனரிடம் பொதுமக்கள் மனு

Update: 2024-12-22 05:55 GMT
சேலம் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் பெரமனூர் பகுதி பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரமளி ராமலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெரமனூர் பகுதியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளை நோட்டமிடுகின்றனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிள், கார்களை நோட்டமிடுகின்றனர். இதனால் பொது மக்கள், பெண்கள் வெளியே வர பயப்படுகிறார்கள். கடந்த 10-ந்தேதி ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போய் உள்ளது. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெரமனூர் பகுதியில் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Similar News