திடீரென பெய்த கோடை மழை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் இன்று மதியம் திடீரென கோடை மழை பெய்தது.
Update: 2024-04-12 13:35 GMT
திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர் .வயதானவர்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென கோடை மழை பெய்தது. வெயிலின் தத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில் கோடை மழை பெய்தது சற்று ஆறுதலாக இருந்தது. இருப்பினும் பலத்த மழை பெய்திருந்தால் வெப்பம் தனிந்து இன்னும் குளிர்ச்சியான சூழல் உருவாகியிருக்கும். ஆனால் லேசான மழை பெய்த்தால் மேலும் வெப்பத்தை கிளப்பி விட்டு சென்றது.