அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு
தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் கீழசெக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 09:49 GMT
சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், நடுச்செக்காரக்குடியில் காய்ச்சல் தடுப்பு களப்பணிகளை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் நேரில் ஆய்வு செய்தார் . சுகாதார ஆய்வாளர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்கான நில அளவீடு பணியையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மக்களை தேடி மருத்துவம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.ரஞ்சித் வினோத், செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.சண்முகராஜா கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர்கள் உடன் இருந்தனர்.