அரசு பஸ்சில் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி

நாகர்கோவிலில் பஸ் மீது பாய்ந்து தற்கொலைக்கு முயன்று பலத்த காயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-09 10:55 GMT
பைல் படம்
குமரி மாவட்டம் நாகர்கோவில் -  திருநெல்வேலி சாலையில் அப்டா மார்க்கெட் அருகில் நான்கு வழி சாலை தொடங்கும் பகுதியில் வாலிபர் ஒருவர் வாகனம் மோதி ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடியபடி கிடந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.    போலீசார் அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் முதலில் டெம்போ முன்பு பாய்ந்துள்ளார். டெம்போ பிரேக் பிடித்து,  நின்று பின்னர் புறப்பட்டு சென்றுள்ளது. இரண்டாவது முறையாக டாரஸ் லாரி மீது அவர் பாயும் காட்சி பதிவாகியுள்ளது. டாரஸ் லாரியும் சடன் பிரேக் பிடித்து நிற்கிறது.   பின்னர் மூன்றாவது முறையாக அரசு விரைவு பஸ் முன்பு பாய்கிறார். இதில் அவர் மீது பஸ் மோதி விட்டு செல்வது பதிவாகியுள்ளது. போலீசார் வாலிபரின் உடமைகளை ஆய்வு செய்த போது, அவரது பெயர் பாலாஜி என்பதும், ஓசூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதும்  தெரியவந்துள்ளது. இவர் நாகர்கோவிலுக்கு எதற்காக வந்தார்?  ஏன் தற்கொலைக்கு முயன்றார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News