வீட்டு உபயோக பொருள் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து !

வீட்டு உபயோக பொருள் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-11 12:16 GMT

தீ விபத்து

ராமாபுரம் பூத்தபேடு செல்லக்கூடிய பிரதான சாலையில் சாய் ஓம் பேன் ஹவுஸ் என்ற எலக்ட்ரீசிசன் வீட்டு உபயோகம் பொருள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கடை முழுவதும் பரவி மளமளவென எறிய தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்துள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி கிண்டி உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து கருகி நாசமானது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News