திருவள்ளூர் அருகே கம்பியில் ஊசலாடும் ஊர் பெயர் பலகை

திருவள்ளூர் அருகே கம்பியில் ஊசலாடும் ஊர் பெயர் பலகையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-09 15:23 GMT

காற்றில் பறக்கும் பெயர் பலகை

திருவள்ளூர் மாவட்டம், விடியங்காடில் இருந்து பொன்னை செல்லும் வழியில் அமைந்துள்ளது கீரைசாத்து கூட்டுச்சாலை. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து கீரைசாத்து கிராமத்தினர், திருத்தணி, சோளிங்கர், சித்துார், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

சமீபத்தில் இந்த பேருந்து நிறுத்தம் அருகே நடப்பட்டிருந்த நெடுஞ்சாலை துறை பெயர் பலகை சேதம் அடைந்தது. இதனால், பேருந்துகள் நிற்காமல் பயணித்து வந்தன. இதனால், பகுதிவாசிகள் இதில் இருந்து தனியே பெயர்ந்து கிடந்த தகரத்தை அங்குள்ள மற்றொரு இரும்பு சட்டத்தில், பகுதிவாசிகள், கம்பி கட்டி தொங்க விட்டுள்ளனர். கம்பியில் தொங்கும் தகரம், காற்றில் பறந்து சென்று, விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது.

என்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினர், புதிய பெயர் பலகையை இங்கு நிறுவவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News