மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு!
மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-23 09:51 GMT
பயிற்சி வகுப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அது தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி தலைமையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட 57 பேருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.