நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பட்டறை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா பயிற்சி பட்டறை கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

Update: 2023-11-10 16:08 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து நடத்துகின்றனர்.

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களை கொண்டு இதற்கான தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்ததொரு தீர்வை கண்டறிய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளை சார்ந்த மாவட்ட அளவிலான அரசுதுறை அலுவலர்கள் 31 நபர்களும், தனியார் துறை தொழில் முனைவோர்கள் 21 நபர்களும் மற்றும் தொழில் முனைவோர்கள் சங்கம் 1ம் இத்திட்ட அறிமுக மற்றும் விளக்கப்பட்டறையில் கலந்து கொண்டனர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கே.இரவி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், பேசுகையில், திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தொழில் முனைவோர் புத்தாக்க மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடைசி ஆண்டு பொறியியல் கல்லூரிரியில் பயிலும் 40 மாணவ மாணவியர்களுக்கும், இதர கல்லூரிகளில் ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 40 மாணவ மாணவியர்களுக்கும் எனமொத்தம் 80 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளளது. இதில் பொறியியல் கல்லூரி கடைசி ஆண்டு பயிலும் முதல் 10 மாணவ மாணவியர்கள் மற்றும் இதர கல்லூரிகளில் பயிலும் முதல் 10 மாணவ மாணவியர்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு தொகையும் மீதமுள்ள மாணவர்களுக்கு 25,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது எனபேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அ. தனகீரத்தி பேசுகையில் 'தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ள குறைகளை கண்டறிந்து தொழில் நுட்பம் மூலம் தீர்வு காணலாம். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 12 புள்ளிகள் வழங்கப்பபடும். இத்திட்டத்தில் ஐஐடி மெட்ராஸ் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனமும் இணைந்து மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கக முடியும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News