சாலையோர மரம் விழுந்து கார் பலத்த சேதம்.
சாலையோர மரம் முறிந்து விழுந்து கார் பலத்த சேதம்.
By : King 24x7 Website
Update: 2023-11-27 16:56 GMT
கோவை: போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்.ராமநாதபுரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். நான்கு சாலை சந்திப்பு சிக்னல் அருகே வந்த போது சாலையின் இடது புறமாக இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர் எந்த ஒரு அசம்பாவிதமின்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை மரம் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றினர். சாலையின் நடுவே மரம் விழுந்ததின் காரணமாக சிறிது நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மரம் அகற்றபட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. சாலையோரத்தில் இருந்த அந்த மரம் உளுத்துப் போன நிலையில் இருந்ததாகவும், சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஊறிப்போனதால் முறிந்து விழுந்திருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். மழை காலம் தொடர்வதால் அபாயகரமான நிலையில் இருக்கும் மரங்களை அதிகாரிகள் கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.