தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து

தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில்மூவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-16 08:35 GMT
தென்காசியில் தனியார் பஸ் - லாரி மோதல், 3 பேர் பலி: 2 டிரைவர்கள் கைது
தென்காசி மாவட்டம், இலத்தூர் விலக்கு ரவுண்டானா பகுதியில் கடந்த 13 ஆம் தேதி தனியார் பஸ் மீது கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று லாரி ஓட்டுநர் முத்துராஜ் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் விக்னேஷ் ஆகிய இரண்டு பேரை இலத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News