லாரியின் பின்னால் மோதிய இருசக்கர வாகனம்
கரூர் மாவட்டம், எல்ல காட்டுவலசில், லாரியின் பின்னால் டூ வீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு அருகே உள்ள சோழன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குமரேசன் வயது 26. லாரி டிரைவர். இவர் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவரது டாரஸ் லாரியை ஓட்டிச் சென்றார்.
இவரது வாகனம் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, எல்லைக்காட்டு வலசு அருகே உள்ள செட்டிநாடு ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் கோவை மாவட்டம், வடவள்ளி, டிகே நகர், சிறுவாணி பகுதியைச் சேர்ந்த வெடியப்பன் மகன் திருமூர்த்தி வயது 19 என்ற இளைஞன், வேகமாக ஓட்டிச் சென்ற டூவீலர், குமரேசன் ஒட்டிச் சென்ற லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த திருமூர்த்திக்கு, முகம், இரண்டு கைகள், கால்கள் மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் குமரேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாக டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.