சிறுவன் ஓட்டிச் சென்ற டூவீலர் முதியவர் மீது மோதி விபத்து.
கோவிந்தம் பாளையம் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற டூவீலர், முதியவர் மீது மோதி விபத்து.
By : King 24x7 Website
Update: 2023-12-03 15:50 GMT
கரூர், சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் 17 வயது சிறுவன். அந்த சிறுவன் டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு 8 மணி அளவில் கோவை - கரூர் சாலையில், அவருக்கு சொந்தமான டூவீலரை ஓட்டிச் சென்றுள்ளார். இவரது வாகனம் கோவிந்தம்பாளையம் சிவசாமி பெட்டி கடை முன்பு சென்ற போது, 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவருக்கு இரண்டு முழங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சியில் உள்ள காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டாங்கோவில் மேல்புரம் கிராம நிர்வாக அலுவலர் மங்கை கரூர் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், டூ வீலரை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்,