முதியவர் மீது இளம் பெண் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்ற முதியவர் மீது, இளம் பெண் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;
Update: 2023-12-23 11:30 GMT
டூவீலர் மோதி விபத்து
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொழிற்பேட்டை அருகே உள்ள எஸ். வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் வயது 84. இவர் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் கரூர்- திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ். வெள்ளாளப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில்,கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் மோனிகா வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற ராமசாமி கவுண்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ராமசாமி கவுண்டருக்கு தலை மற்றும் பின்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமி கவுண்டர் மகன் சந்திரசேகரன் வயது 60 என்பவர், இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக வேகமாக டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோனிகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.