நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

அமராவதி மருத்துவமனை எதிரே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

Update: 2024-06-20 05:28 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, முடிகணம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 48. இவர் ஜூன் 15ஆம் தேதி காலை 11 மணியளவில், கோவை- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அமராவதி மருத்துவமனை எதிரே நடந்து சென்ற போது டிஎன் 47 பி வி 8844 என்ற எண் கொண்ட புல்லட் வாகனம், சுப்பிரமணியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புல்லட் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய அதன் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News