வறண்ட கிணற்றில் வீழ்ந்தவர் பலி
திருச்சி மாவட்டம் ,மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள வறண்ட கிணற்றின் சுவரில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.;
Update: 2024-03-22 11:12 GMT
வறண்ட கிணற்றில் விழுந்தவர் பலி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி பாரதி நகரை சேர்ந்தவர் 46 வயதான ரத்தினவேல். இவர் நேற்று மாலை அங்குள்ள ஊராட்சி நிர்வாகத்திற்க்கு சொந்தமான வரண்ட கிணற்றின் சுவரில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.