உரக்கடைகளுக்கு எச்சரிக்கை
திருத்துறைப்பூண்டியில் உரத்துடன், இடுபொருள்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
Update: 2023-12-22 10:27 GMT
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சில தனியார் உரக்கடைகளில் யூரியா உரத்துடன் மற்ற இடுபொருள்கள் வாங்குமாறு விவசாயிகளிடம் கட்டாயப்படுத்துவதாக புகார் வருவதாகவும் , இது போல் புகாருக்கு உள்ளாகும் உரக்கடைகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தவறுகள் கண்டறியப்பட்டால் விற்பனையை முடக்க உத்தரவு அல்லது உரக்கடை உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகளை உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி எடுக்கப்படும். விவசாயிகள் இது தொடர்பாக புகார் அளிக்கலாம் என திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .