ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஜப்தி நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை.
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஜப்தி நடவடிக்கை பாயும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர், டிச.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஒரு அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை உரிம கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரி இனங்களை நகராட்சி வரி வசூல் கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும், தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மாதம்தோறும் விதிக்கப்படும் அபராத தொகை கட்டணம் ஆகியவற்றை தவிர்த்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும், மேற்கண்ட வரி இனங்களை செலுத்தாத நபர்கள் யாராக இருந்தாலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை பாயும் என அந்த அறிவிப்பில் நகராட்சி ஆணையர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.