திருக்குறள் வினாடி-வினா போட்டி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி-வினா போட்டி
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா போட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க ளுக்காக நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் மாவட்ட அளவி லான முதல்நிலை தேர்வு இன்று (சனிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. அதன்படி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் திருக்குறள் வினாடி-வினா போட்டி இன்று நடக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்நிலை எழுத்து தேர்வில் பங்குபெறும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 'கூகுள் லிங்க்' அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பகிரப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகிறது. பங்கேற்க தகுதி உள்ள போட்டியாளர்கள், முன்பதிவு செய்ய முடியாத பட்சத்தில், நேரடி பதிவு முறையில் நேரடியாக போட்டி நடைபெறும் தேர்வு மையத்துக்கு சென்று பங்கேற்கலாம். இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் மதியம் 1 மணிக்கு முன்பாக அந்தந்த தேர்வு மையத்துக்கு அடையாள அட்டையுடன் வர வேண்டும்.