காங்கேயம் பகுதியில் தொடரும் மரக் கொலைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயத்தில் அனுமதி இன்றி வெட்டப்படும் சாலையோர மரங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வேலிக்காடுகள் ஆகும்,விலை நிலங்களாகவும், கால்நடைகள் மேயும் நிலப்பரப்பாகும் காணப்படுகிறது. பெரும்பாலான கிராமத்து சாலைகளின் இரு ஓரங்களில் மரங்கள் காணப்படுகிறது. இந்த நிலையில் சாலையோரம் மரங்கள் பல்வேறு இடங்களில் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதனால் பசுமை இழந்து நிலத்தின் வெப்பநிலை அதிகரிக்கவும் நிலத்தின் ஈரப்பதம் குறையும் சாலையோர நிழல்கள் இன்றியும் தேவையற்ற முற்பகர்களாகவும் மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவ்வாறு வெட்டப்படும் மரங்களை சிலர் உரிய அனுமதி இன்றி கடத்துவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் வீரணம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகவும் இது குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.