குன்னூர் மலைபாதையில் இரவில் வாகனத்தை மறித்த காட்டுயானை

குன்னூர் மலைபாதையில் இரவில் வாகனத்தை மறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-17 08:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைபாதையில் பிறந்த குட்டி உட்பட10 காட்டுயானைகள் உலா வருகிறது. பகல் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள வன பகுதியிலும் இரவில் சாலையிலும் உலா வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளைய மலைபாதையில் இரவில் உலா வந்த காட்டுயானை ஒன்று கூட்டத்தில் இருந்து பிரிந்து நடு சாலையில் உலா வந்துள்ளது. குறிப்பாக அவ்வழியாக வந்த வாகனத்தை வழி மறித்த காட்டுயா துரத்தியதுள்ளது.

இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். காட்டுயானை குட்டியுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News