மேல்மருவத்தூர் அருகே மூச்சு திணறி பெண் பலி
மேல்மருவத்தூர் அருகே மூச்சு திணறி பெண் பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 14:38 GMT
மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 36. இவரின் மனைவி கலையரசி, 32. இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தைராய்டு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்றும், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.உடனே, உறவினர்கள் அவரை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில், கலையரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின், உடற்கூறாய்வு முடிந்து, கலையரசியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.