கடவூர் அருகே சாலையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
கடவூர் அருகே சாலையில் மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாலையில் மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, சேர்வைக்காரன்பட்டி அருகே உள்ள தலைவாசல், நடு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி முருகம்மாள் வயது 47.
இவர் மார்ச் 30ம் தேதி காலை 11: 20 மணி அளவில், கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கடவூரிலிருந்து செல்லும் சாலையில் கணவாய்மேடு பகுதியில் நடந்து செல்லும் போது, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த முருகம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முருகம்மாள் கணவர் வேல்முருகன் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முருகம்மாள் உடலை திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.