ஜல்லிக்கட்டு காளையை ஆர்வமுடன் வளர்க்கும் பெண்

திண்டுக்கல் அருகே புகையிலைப் பெட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நான்கு காளைகளை தயார்படுத்தி வருகிறார்.

Update: 2024-01-11 01:53 GMT
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப் பெட்டியில் கம்ப்யூட்டர் பி ஜி டி சி ஏ படித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இளம்பெண் ஜெயமணி இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 4 காளைகளை தயார்ப்படுத்தி வருகிறார். அதில், 2 காங்கேயம் மாடுகள், ஒரு தேனி மலைமாடு, ஒரு புளிக்குளம் மாடு உள்ளது. தான் வளர்க்கும் ஒவ்வொரு காளைக்கும் செல்லப் பெயர் வைத்து, நண்பர்களைப் போல் வளர்ப்பதில் ஜெயமணிக்கு நிகர் யாரும் இல்லை. இது குறித்து அவர் கூறுகையில் நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு காக்கப்பட வேண்டும் என்பதற்காக வளர்க்கிறோம் என்றார்.
Tags:    

Similar News