திருப்பூரில் குப்பை லாரி மோதி பைக்கில் சென்ற பெண் பலி

திருப்பூர் மாநகராட்சி குப்பை லாரி பைக் மீது மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானர்.;

Update: 2024-01-06 12:55 GMT

பலியான பெண்

 திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி ஆஷா, தம்பதி தனது இரண்டு வயது மகன்  மௌனீஸ் ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பிச்சம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் வந்தபோது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தட்டு தடுமாறி ரோட்டில் விழுந்த ஆசா தலையின் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ஆஷா உயிரிழந்தார்.

Advertisement

அதிர்ஷ்டவசமாக மணிகண்டன் மற்றும் அவரது மகன் மௌலீஸ் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மணிகண்டன் மற்றும் மௌலீஸ் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News