அறுந்த மின்கம்பியை தொட்ட பெண் பலி
திருவள்ளூர் மாவட்டம்,வேப்பம்பட்டு பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-08 02:21 GMT
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 56. சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு பகுதி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை தன் வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் வந்து உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.