இலுப்பூரில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
இலுப்பூரில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-27 15:21 GMT
இலுப்பூர் பேரூராட்சியில் நவம்பட்டியை சேர்ந்த சாந்தி வயது (49) மற்றும் காவேரி வயது (45) ஆகியோர் பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆகிய இருவரும் பணிக்கு செல்வதற்காக இலுப்பூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகன மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஜனவரி 26 ஆம் தேதி காவேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.