செருகளத்தூரில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து
செருகளத்தூர் பகுதியில் நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 06:09 GMT
கோப்பு படம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் நடந்து சென்ற பூமா என்பவர் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது . பூமா காலில் பலத்த காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த பூமா குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய சாலியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.