மின் வயரை நிலை நிறுத்த கம்பத்துக்குப் பதில் மரக் குச்சி..! மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2023-12-12 05:08 GMT

மின் வயரை நிலை நிறுத்த கம்பத்துக்குப் பதில் மரக் குச்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி கிருஷ்ணாநகரில் தாழ்வாகச் செல்லும் மெயின் மின் வயர்களை மின் கம்பத்துக்குப் பதில், மரக் குச்சியை நட்டு மின் வயரை தூக்கி நிலை நிறுத்தியுள்ளனா்.

திண்டிவனம் ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாநகரில் களியம்-மாம்பட்டு சாலையில் மின் கம்பம் மூலம் தெருவிளக்கு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு மும்முனை மின்சார வயா் செல்கிறது. வீட்டு மின் இணைப்பு, தெரு விளக்கிற்கு மின் வாரியம் சாா்பில் கம்பம் நட்டு மின் வசதி ஏற்படுத்தியுள்ளனா்.

Advertisement

இந்த நிலையில், கம்பத்தில் மின் வயா்கள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் மரக் குச்சியை நட்டு மின் வயரைத் தூக்கி நிலை நிறுத்தியுள்ளனா். எனவே, மின் வாரியம் கம்பம் நட்டு வயரை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர் மேலும், மாவட்ட நிா்வாகமும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்

Tags:    

Similar News