ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-02-23 09:53 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம் வெங்கமேடு விவிஜி நகர் அருகே உள்ள, காமராஜர் தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 54. இவரது மனைவி ஷீலா தேவி வயது 55. சரவணன் அருகில் உள்ள வாங்க பாளையத்தில் செயல்படும் ஆர் ஐ சி என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

வழக்கம்போல பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணி அளவில்,பணியில் இருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சரவணனின் மனைவி ஷீலா தேவி சம்பவ இடத்திற்கு வந்து கணவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், இது தொடர்பாக காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சரவணன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News