படந்தாலுமூட்டில் சொகுசு கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

படந்தாலுமூட்டில் சொகுசு கார் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2024-05-23 16:05 GMT

விபத்தில் சிக்கிய தொழிலாளி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் குமரேசன்.இவரது மகனுக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் தையாலுமூடு பகுதியில் உள்ளது.இந்த தோட்டத்தில் நின்றிருந்த ரப்பர் மரங்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக சாய்ந்தது.

சாய்ந்த மரங்களை சரி செய்ய குமரேசன் நாகக்கோடு பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக அழைத்து சென்றுவிட்டு பணி முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது படந்தாலுமூடு பகுதியில் வைத்து எதிரே அதிவேகமாக வந்த சொகுசு கார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

Advertisement

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய படி கிடந்த நிலையில் அக்கம்பகத்தினர் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கிருந்து இருவரும் தனி தனி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டனர்.இதில் மணிராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தை ஏற்ப்படுத்திய கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெனலட்சுமன் என்பவர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News