சேலத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம்

சேலத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-06-18 08:51 GMT

படுகாயம் அடைந்த தொழிலாளி

சேலம் கன்னங்குறிச்சி அடுத்த சின்ன கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களாக பள்ளப்பட்டி பகுதியில் உள்ள நாராயணசாமிபுரம் பகுதியில் பழைய மாடி வீடு ஒன்றில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். 

 அதன்படி, நேற்று காலை அம்மாசி வழக்கம் போல பணிக்கு வந்து 3-வது மாடி பகுதியில் நின்று பழைய சுவரை இடித்து கொண்டிருந்தார். அப்போது மேல்பகுதியில் இருந்து அம்மாசி தவறி கீழே விழுந்தார்.

Advertisement

இதில் அவரது கால்கள் முறிந்தன. இதனை அறிந்த பொதுமக்கள் உடனே அங்கு ஓடி வந்து படுகாயம் அடைந்த அம்மாசியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அம்மாசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News